அச்சுப்பிரதி எடுக்கக்கூடிய படிவங்கள்


பங்குதாரர்கள் தாம் கொண்டுள்ள டயலொக் பங்குகள் தொடர்பில் அடிக்கடி பயன்படுத்தும் ஆவணங்கள் சில பின்வருமாறு. இலகுவாக பதிவிறக்கம் செய்து, பிரதி எடுத்து, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட ஆவணத்துடன், ஏற்றுக்கொள்ளக்கூடிய மேலதிக ஆவணங்களையும் இணைத்து டயலொக் நிறுவனத்துக்கு பின்வரும் அஞ்சல் முகவரிக்கு தபால் மூலம் அனுப்புங்கள்:

கம்பனி செயலாளர்
டயலொக் ஆஸியாடா பிஎல்சி
3ம் மாடி, இல. 57, தர்மபால மாவத்தை,
கொழும்பு 03.

Forms

முகவரி மாற்றம்

 • சான்றிதழ் வடிவில் நீங்கள் பங்குகளை கொண்டிருப்பின்

  பின்வரும் ஆவணத்தை பயன்படுத்தி, உங்கள் தே.அ.அ/கடவுச்சீட்டின் பிரதியொன்றை இணைத்து அனுப்புங்கள்.

  Download form (PDF)
 • உங்கள் பங்குகள் CDS கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்தால்

  அவற்றில் எம்மால் மாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரம் இல்லை. எனவே உங்கள் பங்குமுகவருடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மத்திய வைப்புத்திட்டம் (பிரைவேற்) லிமிடெட் (CDS) க்கு நேரடியாக உங்கள முகவரி மாற்றம் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள்.

பங்குச் சான்றிதழில் மாற்றம்

 • பங்குச்சான்றிதழில் காணப்படும் உங்கள் பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமாயின், கீழே தரப்பட்டுள்ள ஆவணத்தை பூர்த்தி செய்து பங்குச்சான்றிதழ் அசல் பிரதியுடன் உங்கள் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் பிரதியொன்றுடன் இணைத்து எமக்கு அனுப்புங்கள்.

 • பங்கு சான்றிதழில் உங்கள் பெயரை விவாக நிலையின் காரணமாக மாற்றம் செய்ய வேண்டுமாயின், பின்வரும் ஆவணத்தை பூர்த்தி செய்து, அதனுடன் உங்கள் தே.அ.அ அல்லது கடவுச்சீட்டின் பிரதியொன்றை இணைத்து பின்வரும் பொருத்தமான ஆவணங்களையும் இணைத்து அனுப்புங்கள்(பொருத்தமான).

  1. திருமணத்தின் காரணமாக உங்கள் பெயரில் மாற்றம் ஏற்படின், உங்கள் திருமண அத்தாட்சி பத்திரத்தின் உறுதி செய்யப்பட்ட பிரதி ஒன்றை இணைத்து எங்களுக்கு அனுப்புங்கள்.

  2. விவாகரத்தின் காரணமகா உங்கள் பெயரில் மாற்றம் ஏற்படுமாயின், விவாகரத்தை உறுதி செய்யும் ஆவணத்தின் பிரதியையும், உங்கள் பிறப்பத்தாட்சி பத்திரத்தின் பிரதியையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

  Download form (PDF)

நகல் பங்குச் சான்றிதழுக்கான கோரிக்கை

நகல் பங்குச்சான்றிதழ் என்பது தொலைந்த/காணாமல் போன/முகப்புதோற்றத்தை இழந்த பங்குச்சான்றிதழுக்கு பதிலாக வழங்கப்படும். பின்வரும் ஆவணத்தை நிரப்பி அதனுடன் உங்கள் தே.அ.அ அல்லது கடவுச்சீட்டின் பிரதி ஒன்றும் இணைத்து அனுப்பி வைக்கப்பட வேண்டும். பத்திரிகையில் இந்த வழங்கல் தொடர்பான அறிவித்தலை பிரசுரிப்பதற்கான கட்டணத்தை பங்குதாரர்கள் ஏற்க வேண்டும். (0773908929 எனும் இலகத்தினூடாக எம்மை தொடர்பு கொண்டு, பிரசுரிப்பதற்கான கட்டண விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்).

உங்களுக்கான நகல் சான்றிதழ் தயாரானதும் உங்களுக்கு அறிவிக்கப்படும், அல்லது உங்களுக்கு அதை தபால் மூலம் அனுப்பி வைப்பது தொடர்பிலான ஆணையை நீங்கள் வழங்குவீர்கள்.

Download form (PDF)

 

பங்கிலாப கட்டளை

பங்கிலாப கட்டளை தொடர்பிலான ஆணையை நீங்கள் உங்கள் வங்கி பற்றிய விபரங்களை எம்முடன் பதிவு செய்து கொள்வதன் மூலம் வழங்கலாம், இதன் போது உங்களுக்கான பங்கிலாபத்தை எதிர்வரும் காலங்களில் நேரடியாக வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை கம்பனி மேற்கொள்ளும். இது விரைவானது, இலகுவானது அத்துடன் பாதுகாப்பானது. நீங்கள் ஏற்கனவே பங்கிலாப கட்டளை தொடர்பில் எம்முடன் (அல்லது CDS உடன்) பதிவு செய்துள்ளீர்களாயின், குறித்த விபரங்களை மீளாய்வு செய்த, மாற்றம் ஏதும் இருப்பின் அவை தொடர்பில் அதே ஆவணத்தை பயன்படுத்தி எமக்கு அறியத்தாருங்கள்.

 • சான்றிதழ் வடிவில் பங்குகளை கொண்டிருப்பீர்களாயின்,

  பின்வரும் ஆவணத்தை பூர்த்தி செய்து உங்கள் தே.அ.அ அல்லது கடவுச்சீட்டு பிரதியை இணைத்து அனுப்புங்கள்

  Download form (PDF)
 • உங்கள் பங்குகள் CDS கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்தால்,

  அவற்றில் எம்மால் மாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரம் இல்லை. எனவே உங்கள் பங்குமுகவருடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மத்திய வைப்புத்திட்டம் (பிரைவேற்) லிமிடெட் (CDS) க்கு நேரடியாக உங்கள முகவரி மாற்றம் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள். வங்கி விபரங்கள் (வங்கியின் பெயர், கிளை, முகவரி, கணக்கு இல மற்றும் கணக்கின் வகை) ஆகியவற்றை குறிப்பிட்டு உங்கள் பங்கிலாப கட்டளையை பதிவு செய்து கொள்ளலாம்.

தொலைந்த அல்லது தவறிய பங்கிலாப காசோலைகளை மீள வழங்கல்

உங்கள் பங்கிலாப காசோலைகளை நீங்கள் தொலைத்திருந்தால், அல்லது தவறியிருந்தால், அல்லது உங்களுக்கு கிடைக்காமல் போயிருந்தால், பின்வரும் ஆவணத்தை பூர்த்தி செய்து உங்கள் தே.அ.அ அல்லது கடவுச்சீட்டு பிரதி ஒன்றை இணைத்து எங்களுக்கு அனுப்புங்கள்.

Download form (PDF)

 

பங்கிலாப காசோலையில் மாற்றங்கள்

காலாவதியாகிய காசோலை ஒன்றை மீள்புதுப்பித்துக் கொள்ள அல்லது கைமாற்றத்தகாததை இரத்துச் செய்து கொள்ள அல்லது உங்கள் பெயரை மாற்றிக் கொள்ள, பின்வரும் ஆவணத்தை பூர்த்தி செய்து பங்கிலாப காசோலையையும் இணைத்து, உங்கள் தே.அ.அ அல்லது கடவுச்சீட்டு பிரதியையும் இணைத்து அனுப்புங்கள்.

Download form (PDF)